முகப்பு

 

நான் எப்பொழுது முளைத்தேன்... ஈழத்தில் எம்தமிழன் குருதி குடிக்கப்பட்டது அறிந்து. தமிழ்ச் சகோதரிகள் மார்பகங்கள் அறுக்கப்பட்டது தெரிந்து... தீக்கிரையாக்கியது கண்டு மனம் வெடித்தேன். கனவுகளிலும் கற்பனைகளிலும் மிதந்து கொண்டிருந்த என்னை யதார்த்தத்தைப் பார்க்கத் தூண்டியது அந்நிகழ்வுதான்.

-ஓவியர் புகழேந்தி


---------------------------------------------------------------------------------------------------------------


தலையை, தசையை, கண்ணை, கைகளை ஓவியமாக்கலாம். ஆற்றல் ஒன்றும் தேவையில்லை; பயிற்சியே போதும். ஆனால், பெருமூச்சை ஓவியமாக்குவது எப்படி? அதுதான் புகழேந்தியின் கலை. பாதிக்கப்பட்டவர்களின் பெருமூச்சையே புகழேந்தி ஓவியங்களாய் விதைக்கிறார். பார்க்கிறவனோ பெருமூச்சையல்ல - புயலை அவர் ஓவியங்களிலிருந்து அறுவடை செய்கிறான். துன்பப்படுகிறவர் கள், தாழ்த்தப்படுகிறவர்கள், ஒடுக்கப்படுகிறவர்கள், மிதிக்கப்படுகிறவர்கள் கொல்லப்படுகிறவர்கள் பற்றியே அவரது ஓவியங்கள் துடிப்போடு பேசுகின்றன. கண்ணைக் கிழிக்காத, கருத்தில் உறைக்கின்ற வண்ணங்களாய் - மாந்தனின் இயல்பான விடுதலை உணர்வால் புடைத்து எழும் நரம்பாய்  தசையாய் நாளமாய் வெறும் அப்பல்களாய் இல்லாத வலிமைமிக்க வீச்சுக்களாய் அவர் ஓவியங்கள்.


- உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்